June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தங்கம் விலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,120 உயர்வு

1 min read

Gold prices rise by Rs. 4,120 per sovereign in a single day

21.1.2026

சென்னையில் இன்று (ஜனவரி 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு காலை 2800 ரூபாய் உயர்ந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் சவரனுக்கு 1,320 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 19) தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,07,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 318 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 8,000 ரூபாய் அதிகரித்து, 3.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று (ஜனவரி 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலை கிரா​முக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *