June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தஞ்சையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு – மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

1 min read

‘Victory Tamil Women’ conference in Thanjavur – Chief Minister M.K. Stalin participates

26.1.2026
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *