June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

வட மாநில தொழிலாளி குடும்பம் கொலை: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்

1 min read

Northern State worker’s family murdered: New information released by police

31.1.2026
பீகார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்​யப்​பட்​டு, சாக்கு மூட்​டை​யில் கட்டி அடை​யார், இந்​திரா நகர், 1-வது அவென்​யூ​வில் கடந்த 26-ம் தேதி வீசப்​பட்​டார். இது தொடர்​பாக அடை​யாறு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அதே மாநிலத்​தைச் சேர்ந்த காவலாளி சிக்கந்தர் என்ற சத்​யேந்​தர் (30), கூட்​டாளி​களான அதே மாநிலத்​தைச் சேர்ந்த லலித் யாதவ் (40), விகாஷ் குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கவுரவ் குமார் மட்​டும் அல்​லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22), மகன் பிர்​மானி குமார் (2) ஆகியோரை​யும் கொலை செய்து சாக்கு மூட்​டை​யில் கட்டி வீசி​யது தெரிந்​தது. குறிப்​பாக மகன் மத்​திய கைலாஷ் ரயில்வே பாலத்​தின் கீழ் உள்ள பக்​கிங்​ஹாம் கால்​வாய், மனைவி பெருங்​குடி குப்பைக் கிடங்​கில் வீசப்​பட்​டனர். பிஹார் இளைஞர், அவரது மகன் உடல்​கள் அடுத்​தடுத்து மீட்​கப்​பட்ட நிலை​யில், மனைவி உடலை பொக்​லைன் இயந்​திரம் மூலம் பெருங்​குடி குப்பைக் கிடங்​கில் போலீ​ஸார் தொடர்ந்து தேடினர். நேற்று 3-வது நாளாக 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மற்​றும் மாநக​ராட்சி ஊழியர்​கள் குப்பையை கிளறி தேடினர். இதையடுத்து மதி​யம் 12 மணி​யள​வில் முனிதா குமாரி உடல் மீட்​கப்​பட்​டது.

முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட மூவரும் முனிதா குமாரியை பாலியல் பலாத்​காரம் செய்ய முயன்​றதும், ஒத்​துழைக்​காத அவரை​யும், தடுக்க முயன்ற அவரது கணவரை​யும், அழுது கொண்​டிருந்த மகனை​யும் அடித்து கொலை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து இவர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில் மாறுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டறியப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முனிதா குமாரி என்பவரின் பிரேதமானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் 31.01.2026 முற்பகல், உதவிப் பேராசிரியர்கள் மருத்துவர். சிவக்குமார் மற்றும் ரகுராம் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மேற்படி பெண் கற்பழிக்கப்பட்டதற்கான மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவுமில்லை என்றும், தலையில் இரும்பு கம்பியினால் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே இறப்பு ஏற்பட்டுள்ளது”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *