காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாவு
1 min read
4 members of the same family die in wild elephant attack
13.2.2023
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் காட்டு யானை கூட்டம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு சர்சூ பகுதியில் உள்ள கொண்ட்வார் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள், இன்று அதிகாலை இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றன. இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த யானை கூட்டம் போகாரோ, ராம்கர் மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. இதற்கு முன்பும் இதேபோல் பலர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.