June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

1 min read

புல்வாமா தாக்குதல் பைல் போட்டோ

Pulwama Attack Memorial Day: PM Modi remembers martyred soldiers

14/2/2026
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (14-02-2026) அனுசரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சி.ஆ.ர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று புல்வாமா தாக்குதல் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றென்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலை கண்டு உத்வேகம் பெறுகின்றனர்.

இவ்வாறு பிரதமர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *