August 24, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக கீழப்பாவூர் பொன்செல்வன் பதவியேற்பு

1 min read


Keelappavur Ponselvan takes oath as the Chairman of the Tenkasi District Board of Trustees

16.2.2026
தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீ.பொன்செல்வன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வகைப்படுத்தப்பட்டுள்ள திருக்கோவில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட 5 நபர்கள் கொண்ட மாவட்டக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீ.பொன்செல்வன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராகவும், ஒன்றியக்கவுன்சிலர் ஆ.கலாநிதி, மா.உமா மாரியப்பன், கு.வேல்முருகன், மு.சங்கரநாராயணன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோவிலில் நடைபெற்றது. தலைவராக சீ.பொன்செல்வனும், உறுப்பினர்களாக ஆ.கலாநிதி, மா.உமா மாரியப்பன், கு.வேல்முருகன், மா.உமா மாரியப்பன், கு.வேல்முருகன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக பார்வையாளர் டாக்டர் கலைகதிரவன், தென்காசி காசி விசுவநாதசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ஜெயா, சிவகுமார், மகேஸ்மாயவன், அழகுசுந்தரம், சமுத்திரபாண்டி, அன்பழகன், மாரிவண்ணமுத்து, பேரூர் செயலாளர்கள் ஜெகதீசன், சுடலை, முத்தையா, நகராட்சி தலைவர்கள் சாதிர், மூப்பன்ஹபிபுர் ரகுமான், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்.அறிவழகன், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், கடையம்பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், திமுக நிர்வாகிகள் தங்கசாமி, ராமசாமி, பிரேம்குமார், சமுத்திரபாண்டி, ராம்ராஜ், தங்கப்பாண்டியன், அழகுதமிழ்சங்கர், வல்லம் செல்வம், ஷபீக் அலி, ஆறுமுகசெல்வன், சிவராஜ், தங்கேஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *