June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தொடரும் வளர்ச்சிப் பணிகள், பெருகும் திட்டங்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min read

Continuing development work, increasing projects – MK Stalin is proud

26.2.2026
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஈசிஆர்-இல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடத்திற்கு அடிக்கல், பிரிக்ளின் சாலைக்கு ’திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசனின் பெயர் சூட்டப்பட்டுத் திறந்துவைத்தல்,

தொழில்துறை சார்பிலான நிகழ்ச்சியில், EROS GEN AI நிறுவனம் – ஐஐடி மெட்ராஸ் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள Large Cultural Voice Models (LCVM) திட்டம் வெளியீடு, திருநெல்வேலி – ரெட்டியார்பட்டி, விருதுநகர் – கூரைக்குண்டு மற்றும் ஈரோடு – கங்காபுரம் என மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைக்க அடிக்கல், தைவான் ADATA டெக்னாலஜி துணை நிறுவனமான ADATA செமிகண்டக்டர் நிறுவனம், ரூ. 931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் சிப்காட் திருப்பெரும்புதூரில், DRAM memory modules and Flash drives உற்பத்தி ஆலை அமைக்க அடிக்கல்,

வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் 250 படுக்கைகள் வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசுப் பணியாளர்களுக்கான “C” வகை குடியிருப்புக் கட்டடம் திறப்பு,

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 35 மாவட்டங்களில், 217 அரசுப் பள்ளிகளில் 296.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,232 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் பிற வசதிகள் திறப்பு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மறுகட்டுமானங்கள் திறப்பு, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கோவில்மலையாற்றின் குறுக்கே சிறிய அணை அமைக்கும் பணிக்கு அடிக்கல்,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல், குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தச் சிறப்பாகச் செயலாற்றிய தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகங்களின் சாதனைகளைப் பாராட்டி விருதுகள் உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *