June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்-இளைஞர் திறன் திருவிழா

1 min read

Employment Camp-Youth Skills Festival in Tenkasi

1.3.2026

தென்காசி மாவட்ட ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டி மையத்துடன் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா வருகின்ற 03.03.2026 செவ்வாய்கிழமை அன்று இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ பொறியியல் போன்ற கல்வி தகுதியுடைய அனைவரும் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

இளைஞர் திறன் திருவிழாவில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு (ஆண்/பெண் இருபாலரும்) திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான இளைஞர்களை திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்வர். இதில் கலந்து கொள்வதற்கு தங்களது சுய விபரம் கல்விச் சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *