கடையநல்லூர் தொகுதியில் ரூ. 21 லட்சம் செலவில் வளர்ச்சிப்பணிகள்
1 min read
Development works in Kadayanallur constituency at a cost of Rs. 21 lakh
3.3.2026
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.21 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை
செ கிருஷ்ணமுரளி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தெற்குமேடு ஊராட்சி பாக்கிய நகரில் ரூ 17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,
பின்னர் கட்டளை குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டிலும், அதே போல இலத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் பணியினை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு அர்ப்பணித்தார்,
இந்நிகழ்ச்சி கழக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன்,
மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.