ஆலங்குளம் வளர்ச்சி திட்ட பணிகள்-ஆட்சியர் ஆய்வு
1 min read
Alankulam Development Project Works-Ruler Inspection
3.3.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாயமான்குறிச்சி, நெட்டூர், கடங்கநேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று. மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கமல்கிஷோர் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாயமான்குறிச்சி கடங்கநேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தலா ரூ.9.95 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணைகளையும் நெட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 2.87 இலட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பணிகளையும், நெட்டூர் கடங்கநேரி ஆகிய ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் (2025 2026) திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டி வரும் பணிகளையும் நெட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் 02 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 596 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டுவரும் பணிகளையும். திடக்கழிவு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நெட்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை உயரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆலங்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செல்வராஜ், உதவி பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஞானபிரகாஷி, சரஸ்வதி சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.