June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: 27 வது நாளாக கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

1 min read

Tenkasi: Village assistants’ wait-and-see protest enters 27th day.

3/3/2026
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 27 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்டநாள் கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முடிவின் படி நான்காம் நிலைக்கு இணையான டி பிரிவு ஊதியம் வழங்க வலி யுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த பிப்.5ம் தேதி முதல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங் களின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்தில் 27 வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு தலைவர் வேலு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர், சிவசுப்பிரமணியன்,
பொருளாளர் லிங்கேஷ், முன்னாள் மாநில துணைத் தலைவர் சண்முக சுந்தர பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட னர். கோட்டத் தலைவர் குருவம்மாள் தலைமையில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னி லையில் திரளாகப் பங்கேற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *