June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரி இரட்டைக் கொலை : 7 பேர் கைது

1 min read


Nanguneri double murder: 7 people arrested

3/3/2026
திருநெல்வேலியில் இரட்டைக் கொலை விவகாரத்தில் போலீசாரால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கஞ்சா போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *