June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரி இரட்டைக் கொலை; உடல்களை வாங்க மறுத்து போராட்டம்

1 min read

Nanguneri double murder; Protest against the collection of bodies

4/3/2026
நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டைக் கொலையில் இறந்தவர் கள்உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்தசம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்பு டைய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து ஊருக்கு நேற்று முன்தினம் இரவு 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்தது. பின்னர் அந்த கும்பல் அப்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது. அதைத் தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர் களை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் பெரும்பத்து இந்திரா காலனி சேர்ந்த ஜான் மார்க்(வயது 46) மற்றும் ஒடிசாவை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரி நாத் கட்டா(வயது 50) ஐயோரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். பெரும்பத்தை சேர்ந்த நெல்சன் (வயது 57), பிர பாகரன் (வயது 49), ராமசாமி (வயது 74), வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 53) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கடம்போடுவாழ்வு சாலையில் சென்று கொண் டிருந்த ஒருவரையும் அரி வாளால் வெட்டியது. இத னிடையே தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்து படுகாயம் அடைந்தவர்களை
சிகிச்சைக்காக மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் உயிரிழந்த ஜான் மார்க் மற்றும் திரிநாத் கட்டா ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக் காக பாளை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி சரவ ணன், எஸ்பி பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப் பட்டனர். மேலும் குற்ற வாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டு அவர்களை தேடிவந்தனர். 9 பேர் கொண்ட கும்பல் கொடூர செயலில் ஈடுபட்டதை அறிந்த அப்ப குதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து நேற்றும் பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்பி பிரசன்ன குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் ஆவேசமாக பேசினர். அவர்களிடம் குற்றவாளிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக் கப்படும் என எஸ்பி தெரி வித்தார். இந்த நிலையில்

இரட்டைக் கொலையில்
ஈடுபட்ட தென்னி மலையைச் சேர்ந்த சுடலை கண்ணு மகன் கண்ணன் (வயது 21), மகன் அந்தோணி மைக் கேல் (வயது 18), முருகன் மகன் சுப்பையா என்ற சுபாஷ் (வயது 19), மற்றொரு சுடலை கண்ணு மகன் கல்யாணி (வயது 19), வள்ளியூர் ஆண்டி மகன் உச்சி மகாளி என்ற மிட்டாய் (வயது20), நெடுங்கு ளம் முருகன் மகன் வசந்த குமார் (வயது 21), நம்பி நகர் முத் தையா மகன் ராஜா (வயது 19) ஆகிய 7 பேர் கைது செய் யப்பட்டனர்.

இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை சம் பவம் தொடர்பாக நாங்குநேரி பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஜிபி மகேஸ் வர்தயாள், ஐஜி விஜயந்திர பிதாரி ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினர். தென் காசி எஸ்.பி மாதவன், நாங்குநேரியில் முகாமிட்டு உள்ளார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜான் மார்க் மற்றும் திரிநாத் கட்டா ஆகியோர் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் ஆனால் உடல்நிலை வாங்க மறுத்து பொதுமக் கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருவதால் நாங்குநேரி பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நிலவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *