கற்குடி ஊராட்சி பகுதியில் குடிநீர் கிணறு அமைக்கும் பணி
1 min read
Construction of a drinking water well in Kalkudi Panchayat area
5.3.2026
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்தும் திட்டங்களை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட நிதி உதவியுடன் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கற்குடி ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிணறு அமைக்கும் பணியினை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார், பின்னர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளயில் அமைக்கப்பட்ட பேவர் ப்ளாக் தளத்தினை மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்,
இந்த நிகழ்ச்சிகளில் அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய கழக செயலாளரும் அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவருமான டாக்டர் சுசீகரன், கற்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துபாண்டியன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் வாவை ஜாஹீர் உசேன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சக்கரை இஸ்மாயில், முகமது உசேன், கட்டகுட்டி என்ற ஷேக் உசேன், மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் மாலிக், சப்பாணி என்ற சேகர், கவுன்சிலர் சுரேஷ், அண்ணா தொழிற்சங்கம் சுப்பையா பாண்டியன், அண்ணா நகர் குமார், மணிகண்டன்,வார்டு செயலாளர்கள் காவையா, கோபால், தம்பி என்ற உசேன், அச்சன்புதூர் அம்மா பேரவை செயலாளர் இசக்கிதுரை, சமூக ஆர்வலர் சாமிதுரை மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.