June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் அரசின் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்த மனோஜ் பாண்டியன்

1 min read

Manoj Pandian inspected various government projects in the market

6.3.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப் பணிகளை . பால்.மனோஜ் பாண்டியன் ஆய்வு செய்தார்.

கடையம் கல்யாணிபுரம் பகுதியில் முப்புடாதி அம்மன் திருக்கோயிலில் ஆதிதிராவிடர் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. இரண்டரை இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணி, கடையம் வில்வனநாதர் திருக்கோயிலின் உபகோயிலான பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் ரூ. 81.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அன்னதான கூடத்தின் பணிகள் மற்றும் அழகப்பபுரத்தில் ரூ. 34.98 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தின் பணிகளையும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பால்‌.மனோஜ் பாண்டியன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார், டிஎன்கேஎஸ். 95 இராமநதி வடகால் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் இராமகிருஷ்ணன், யூனியன் கவுன்சிலர் புளி கணேசன், கண்ணன், நூருல் அமீர், திமுக இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் சதாம் உசேன், தருமபுரமடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாஸ்கர், கிளைச் செயலாளர் சேகர், விவசாய சங்கத் தலைவர் நடராஜன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், சிபிஐ(எம்) கிளைச் செயலாளர் செந்திவேல், வேலையா, ரவிச்சந்திரன், ராமசுப்பு, பாஜக நிர்வாகிகள் ராமசாமி, சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஜோசப், நிருபர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *