ஈரான் தாக்குதலில் 190 ஏவுகணைகள், 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிப்பு
1 min read
190 missiles, 1,110 drones intercepted and destroyed in Iran attack
9.3.2026
அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட 9 பாலிஸ் டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கையை அமீரக வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. நேற்று 112 டிரோன்கள் அமீரகத்தை நோக்கி வந்தன. அவற்றில் 109 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இதில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து மொத்தம் 205 ஏவுகணைகள் நாட்டை நோக்கி வந்தன. அவற்றில் 190 ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டன. மேலும் 13 ஏவுகணைகள் கடலில் விழுந்தன. ஒரு ஏவுகணை அமீரகத்தின் நிலப்பரப்பில் விழுந்தது. அதேபோல் மொத்தம் 1,184 டிரோன்கள் ஈரானில் இருந்து தாக்க வந்தது. இதில் 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மீதியுள்ள 74 டிரோன்கள் கடலில் விழுந்துள்ளன.