June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பாட்டிக்கு தாத்தா தலைசீவி விடும் போட்டி

1 min read

Grandpa’s head-scratching contest with grandma

9.3.2026
சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழாவும், தாத்தா – பாட்டி தின விழாவும் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

காமராஜர் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை பொருளாளர் ராஜாமணி, முருகேசப்பாண்டியன், சங்க பொருளாளர் கே.எம்.செல்லதுரை, பொதுச் செயலாளர் ஆர்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக மகளிர் தின விழாவில் பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் தாயார் கலந்துகொண்டு கோலாட்டம் ஆடினர். தாத்தா – பாட்டி தின விழாவில் பங்கேற்ற பெரியோர்களுக்கு 3 வகையான போட்டிகள் நடைபெற்றன. தாத்தா, பாட்டிகளுக்கு தனியாகவும், ஜோடியாகவும் போட்டிகள் நடைபெற்றன.

பழைய பாடல்களின் இசையை ஒலிக்கச் செய்து, பாடல்களை கண்டுபிடித்து பாடச் சொல்வது, தாத்தாக்களுக்கு சேலை மடிக்கும்போட்டி, மனைவிக்கு தலைமுடி கட்டி, முக அலங்காரம் செய்யும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆர்வமுடன் பங்கேற்று தாத்தா – பாட்டிகள் அசத்தினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *