அம்பை அருகே காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
1 min read
Husband hacks his loving wife to death with a sickle near Amba
9.3.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொன்நகர் பகுதியில் காதல் திருமணம் செய்த மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 32). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்பை பூக்கடை பஜார் பகுதியில் உள்ள வெவ்வேறு கடைகளில் இருவரும் பூ கட்டும் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு முகுந்தன் (வயது 9) என்ற மக னும், நிக்கிஷா (வயது 4) என்ற மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டு வந்ததாக கூறப்ப டுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கியம்மாள், கடந்த சில மாதங்களாக கணவரைப் பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்தபடி அங்கு வந்த சிவா,மனைவியை வழி மறித்து சரமாரியாக அரி வாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் இசக்கியம்மாள் சரிந்ததும், சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய இசக்கியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக் கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சிவாவை தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பெண்ணை கணவரே சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.