June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை 50-ஐ கடந்தது

1 min read

The number of leopards in India has crossed 50

10.3.2026
மத்தியப் பிரதேசத்தின் குன்னோ தேசியப் பூங்காவில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘ஜவாலா’ என்ற சிறுத்தை ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.
1952-ல் இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, 70 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் அதன் எண்ணிக்கை 50-ஐத் தாண்டியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, இந்திய மண்ணில் ஈன்றெடுக்கப்பட்ட 10-வது வெற்றிகரமான பிரசவம் இதுவாகும். இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்பு பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்.

இந்த சாதனை கால்நடை மருத்துவர்கள், கள ஊழியர்கள் மற்றும் வன ஊழியர்கள் என அனைவரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்தக் குட்டிகளின் வருகையுடன், இந்தியாவில் மொத்த சிறுத்தை எண்ணிக்கை தற்போது 53 ஐ எட்டியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *