June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கருத்தலிங்கபுரத்திற்கு அரசு பஸ்வசதி

1 min read

Government bus service to Kartalingapura

12.3.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து தோரணமலை செல்லும் அரசு பேருந்தை கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருத்தலிங்கபுரம் வழியாக இயக்க அனுமதி பெற்று தந்து முதல் பயணத்தை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆலங்குளத்திலிருந்து தோரணமலை வரை செல்லும் (தடம் எண் 27F) அரசு பேருந்தை தங்கள் கிராமம் வழியாக இயக்க வேண்டுமென்ற கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருத்தலிங்கபுரம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தென்காசி போக்குவரத்து கழக மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்று தந்து கருத்தலிங்கபுரம் வழியாக முதல் பயணத்தை தொடங்கிய பேருந்தை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய திமுக அவைத்தலைவர் ரவி, மாவட்ட பிரதிநிதி ரவி சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் லூர்து அற்புதராஜ், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், பாக முகவர்கள் அருண்குமார், கருத்தபாண்டி, கிளைச் செயலாளர்கள் ஜெயராஜ், திருப்பாற்கடல், கிளை இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜ், உதயன், சுப்பிரமணியன், கணேசன் உள்ளிட்ட திமுகவினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த தடத்தில் பேருந்து இயக்கப்படுவதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர், வியாபாரிகள், மருத்துவமனை மற்றும் பல்வேறு பணிகளுக்காக ஆலங்குளம் செல்லும் தங்களுக்கு மிகவும் பயனளிக்குமென்றும் இந்த தடத்தில் பேருந்தை இயக்க அனுமதி பெற்று தந்த ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன், பரிந்துரை செய்த கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *