தென்காசி தொகுதி வாக்குச்சாவடி- ஆட்சியர் ஆய்வு
1 min read
Tenkasi Constituency Polling Station – Collector Inspection
12.3.2026
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. கீழப்புலியூர் வீரமாமுனிவர் ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, தென்காசி காட்டுபாவா நடுநிலைப்பள்ளி திருமதி.மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி இலஞ்சி ராமசாமி பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தேர்தல் பணிக்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், எடை, உயரம் மற்றும் கற்றல்திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவிபால், தென்காசி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.