June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகளுடன் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி

1 min read

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

Husband and wife attempt suicide with 2 daughters at Tenkasi Collector’s office

12/3/2026
தென்காசி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 15 பவுன் தங்க நகை மோசடியினால் தங்களது இரண்டு மகள்களுடன் கணவன், மனைவி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள வடகரை அண்ணாநகர் பகுதியில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் பாலகி ருஷ்ணன். அவரது மனைவி சரண்யா இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகில் சதீஷ் (வயது 21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரிய பண உதவி தேவைப் பட்டதாகவும் அதன் அடிப்படையில் சரண்யா தனது நகைகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு சரண்யாவிடம் இருந்து சிறிது சிறிதாக அவரது கம்மல், செயின், மோதிரம், தாலி செயின் உள்ளிட்ட 15 பவுன் நகைகளை வாங்கிய நிலையில் தற்போது அவர் அதனை திரும்பத் தராமல் ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சரண்யா, அவரது கணவர் பால கிருஷ்ணன், அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரின் தாய் தந்தை உள்ளிட்ட 6 பேர் மனு அளிக்க வந்தனர். கலெக்டர் அலுவலக வாசல் முன்பாக பால கிருஷ்ணன் தனது கையில் மறைத்து வைத்திருந்த வயலுக்கு பயன் படுத்தக்கூடிய பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அதனை கொடுக்க அவர் இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக அவரது கையில் இருந்த பூச்சி மருந்தை பறிமுதல் செய்தனர் .

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு தங்கள் நகைகளை எப்படியாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க அவர்கள் அழுது புரண்டனர். போலீசார் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *