June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி அருகே பாலியல் பலாதாரம் செய்து பிளஸ்2 மாணவி கொடூர கொலை- மறியல்

1 min read

Plus 2 student brutally murdered after being raped near Thoothukudi – picketing

12/3/2023
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த17 வயது மாணவி குறுக்கு சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவர் இரவு உப பாதைகழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை உடனடியாக பெற்றோர்கள் மாணவியை தேடினார்கள் இரவு முழுதும் தேடி மாணவி கிடைக்காததால் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்

இந்த நிலையில் வேடநத்தம் கிராமத்தின் எல்லைப்புற பகுதியில் ஆடைகள் முழுவதும் கலைந்த நிலையில் பாலியல் பலாதாரம் செய்யப்பட்டு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுகிடந்தார்

இது குறித்து தகவல் அறிந்த
குளத்தூர் காவல் நிலைய போலீசார்சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர் குழு, மோப்ப நாய் படை மற்றும் நுண்ணறிவு ஆய்வக குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மாணவியின் பிணம் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

இது குறித்து தகவல் அறிந்த வேடநத்தம் கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலை ரோடு ராமேஸ்வரம் செல்லும் பாதையில் நடு ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது உடனே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ் பி மதன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் கொலையாளியை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கிராம மக்கள் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள் சுமார் 4 மணி நேரம் போராட்டம் நடந்தது பின்னர் குற்றவாளியை இரவுக்குள் கைது செய்து விடுவோம் என்று போலீசார் உறுதிமொழி கொடுத்ததால் அனைவரும் கலந்து கொண்டனர் ஆனாலும் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலை வருகிறது

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையின் காரணம் மற்றும் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 3 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *