June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பாசமுத்திரத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் கைது

1 min read

Husband arrested for stabbing wife to death in Ambasamudram

12.3.2026
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவை சேர்ந்தவர்
முத்துப்பட்டன் என்ற அஜித் (வயது 26). இவருடைய மனைவி சுதா (வயது 25). இந்த தம்பதிக்கு ஆறு மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அஜித் கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில் பக்கத்து வீட்டுக்காரருடன் அவரது மனைவி சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கைவிடுமாறு கணவர் அஜித் பலமுறை கண்டித்த நிலையில் கடத்த சில தினங்களாக இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அஜித் அவரது வீட்டின் உள்ளே வைத்து மனைவி சுதாவின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதடித்து சுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மனைவியை வெட்டிக் கொலை செய்த அஜித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *