பரமக்குடி பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த வாகனங்கள்
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; highlight: false; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;
Vehicles piled up at Paramakudi petrol pumps
12.3.2026
வளைகுடா நாடுகளில் நடந்துவரும் போரினால் பெட்ரோல்,டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு குவிந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 10 க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று அதிகாலை முதலே இரு சக்கர வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனர்.பெட்ரோல் நிலையங்களில் ஆண்,பெண் வாகன ஓட்டிகள் நீண்ட க்யூ வரிசையில் நின்று போட்டிபோட்டு கொண்டு தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதுடன், தாங்கள் கொண்டுவந்த பாட்டில்கள், கேன்களிலும் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர்.இதற்கு ஏராளமான வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வாங்குபவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பான நிலை காணப்பட்டது.
இதனிடையே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, முறையாக கிடைக்கிறது என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறினாலும் வாகன ஓட்டிகள் பரவாயில்லை,பெட்ரோல்,டீசலை எங்களுக்கு போடுங்கள் என கூறி வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி செல்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் குறித்து எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என பெட்ரோல் பங்க் ஊழியர்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குணாளன், நிருபர்.