தோரணமலையில் கடைசி வெள்ளி வருண கலச பூஜை
1 min read
Last Friday Varuna Kalasa Puja at Thoranamalai
13.3.2026
தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வருண கலச பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் சித்தர்கள் முனிவர்களால் வழிபடப்பட்ட பெருமையும் புராதனமும் உடைய கோவிலாகும். மாதம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகளின் வாழ்வு சிறக்கவும் வருண கலச பூஜை பெற்றது.21 கலசங்களில் மலை மீது உள்ள சுனையிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில் உள்ள கலையரங்கத்தில் வைத்து உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது பக்தர்களுக்கு காலை மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.