மாலி நாட்டில் பயங்கரவாதி களிடம் சிக்கி மீண்டு வந்த கண்மணியாபுரம் சுரேஷ்
1 min read
Kanmaniapuram Suresh, who was captured by terrorists in Mali, recovered
15.3.2026
மாலி நாட்டில் பயங்கரவாதிகளிடம் சிக்கிய நபர்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொண்ட கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளிக்கு சொந்த ஊர் திரும்பிய கண்மணியாபுரம் சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி ராஜா உள்ளிட்டோர் மேற்கு ஆப்பிரிக்கா மாலி நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்த போது கடந்த நவம்பர் மாதம் அங்குள்ள பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாத நிலை இருந்து வந்தது, இந்த தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தார், அதன் பின்னர் பாரதப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர், இந்திய தூதரகம் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு கிருஷ்ணமுரளி இமெயில் மூலம் கோரிக்கை மனு அளித்திருந்தார்,
இதனை பரிசீலனை செய்து இவர்கள் இருவர் உட்பட உட்பட ஐந்து பேரையும் மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை பலமாக எழுந்தது
கடந்த வாரம் வெளியுறவுத்துறையில் இருந்து அனுப்பிய பதில் மெயிலில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் ஊர் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் கடந்த 09 ம் தேதி பயங்கரவாதிகள் அவர்களை விடுவித்த நிலையில் சனிக்கிழமை இரவு கண்மணியுபுரம் சுரேஷ் சொந்த ஊருக்கு வருகை தந்தார், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து நடந்த விபரங்களை கேட்டறிந்து நன்றாக ஒய்வெடுங்கள், குடும்பத்தினர் வேண்டுதல் வீண்போகவில்லை உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என்று கூறினார்,
நீங்கள் என்னை இப்போது பார்க்க வந்ததற்கு நன்றி எனக்காக நீங்கள் சட்டமன்றத்தில் பேசியதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் சுரேஷ் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளியிடம் தெரிவித்தார்,
இந்நிகழ்வின் போது மாவட்ட கழக அவைத்தலைவர் வி பி மூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், ஒன்றிய கழக செயலாளர் பெரியதுரை மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் பயங்கரவாதிகளால் சிறைபிடித்திருந்தாலும் இவர்களை மீட்க வேண்டும் என்று பாரத பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறைக்கு இ மெயில் மூலம் வலியுறுத்திய ஒரே சட்டமன்ற உறுப்பினர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ணமுரளி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.