கடையத்தில் மகளிர் காங். ஆர்ப்பாட்டம்
1 min read
Women’s Congress protest in the market
15.3.2026
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி தலைமையில், தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலையம் அருகே வைத்து சிலிண்டருக்கு மாலை போட்டும், விறகு அடுப்பால் தோசை சுட்டும் நூதன போராட்டம் நடந்தது.
பின்னர் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் எஸ்.செல்வராஜ், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் கிளங்காடுமணி, செங்கை கண்ணன், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், ராஜாராம், அரி நாராயணன், மணிகண்டன், ராஜீவ் காந்தி, கடையம் வட்டார தலைவர்கள் முருகன்,அழகுதுரை, ஆதிமூலம், மகளிர் அணி நிர்வாகிகள் சேர்மக்கனி, புஷ்பவல்லி, தங்கம்மாள் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார, பேரூர், கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.