June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை அருகே 87 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

1 min read

87 kg of tobacco products seized near Sengottai – two arrested

17.3.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 87 கிலோ புகை யிலைப் பொருட்களை பறி முதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி எஸ்பி ஜி.எஸ்.மாதவன் உத் தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய
தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில்
ஈடுபட்டனர்.

இதில் தேன்பொத்தை வைரவன் என்பவரது மகன் திருமலைக்குமார் (வயது 27), விஸ்வநாதபுரம் தங்கராஜ் என்பவரது மகன் ராஜேஷ் குமார் (வயது 29) ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 87 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்ததோடு. அவர்களி டம் இருந்து 87 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கிவரப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *