முக்கூடல் அருகே பெண் சந்தேக மரணம்- பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் மறியல்
1 min read
Suspicious death of a woman near Mukudal – Protest over delay in autopsy
17.3.2026
நெல்லை மாவட்டம் முக்கூடலில் மூதாட்டி இறப் பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகள் அளித்த போலீசில் புகாரின் பேரில் சடலத்தை பிரேத பரி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தாசில்தார் வராத்தால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்ட டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறி பல் போராட்டத்தில் ஈடு பட்டதால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை கிராமத்தை சேர்ந்த செலின் மேரி ( வயது 64) இவருக்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் மரிய வியாகம்மாள் ரூபி (வயது 45) என்பவர் தனது கணவருடன் ராமையன்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் மரிய அந்தோணிபப்பி என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய்க்கும் இளைய மகளுக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததது இந்நிலையில் கடந்த ஜன.11ம் தேதி செலின்மேரி திடீரென உயிரிழந்தார்
அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக மூதத மகள் மரிய வியாகம்மான் ரூபி முக்கூடல் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் மரணத்தில் உண்மை குறித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.
இந்நிலையில் மர்மமரணம் அடைந்த செலின் மேரியின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முயற்சி மேற்ஙொண்ட நிலையில் சேரன்மகாதேவி தாசில்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் செய்வதாக கூறி
அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
அதனை தொடர்ந்து பாப்பாக்குடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் மரியவியாகம்மாள் ‘தனது தாயின் மரணத் திற்கு நீதி வேண்டும். அவரது சாவில் இருக்கும் மர்மம் தெரிய வேண் டும். அதற்கு உடலை தோண்டி எடுத்தால் தான் ஆனால் உண்மை தெரியவரும். அதற்கு சேரன்மகாதேவி தாசில்தார் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார். இரண்டு மாதங்களாகியும் எதிர்த்தரப்பை சேர்ந்தவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் அதனால் உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்