August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

2-வது நாளாக சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து

1 min read

Flights from Chennai to Dubai cancelled for the 2nd day

17.3.2026
20-க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அமீரகத்தில் இன்று 18-வது நாளாக ஈரான் தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இதன் காரணமாக துபாய், புஜேரா உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனிடையே துபாய் விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை தொடர்ந்து விமானப் போக்குவரத்துக்கான வான்பகுதியை மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனங்களின் அறிவுறுத்தலை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், அபுதாபி, தோகா, குவைத், பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *