பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்
1 min read
Teja alliance protests across Tamil Nadu, urging women’s safety
17.3.2026
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையை கண்டித்து இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேஜ கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி, தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஈரோட்டில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.