June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: அனுமதி பெற்ற துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min read

Tenkasi: Collector instructs to hand over licensed firearms to the police station

17.3.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை படைக்கல சட்டம், 1959 பிரிவு 21-ன்படி படைக்கலன்கள் (துப்பாக்கி) எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது.

எனவே. தென்காசி மாவட்டத்தில் (துப்பாக்கி) படைக்கலன்கள் வைத்திருக்கும் அனைத்து படைக்கலன் உரிமைதாரர்களும் தங்கள் வசமுள்ள படைக்கலன்களை 23.032026 ஆம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படை செய்து, உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட (துப்பாக்கி) படைக்கலன்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *