தென்காசியில் தமிழக அரசை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
1 min read
AIADMK alliance parties protest against Tamil Nadu government in Tenkasi
17.3.2026
தென்காசி மாவட்ட அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதை பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கினங்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ. மோகன்தாஸ் பாண்டியன், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆகியோரது தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராம்ராஜ், தீனதயாளன், பொருளாளர் கோதை மாரியப்பன், அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் கற்பகம் குருநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் அருணகிரிசாமி, பாமக வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, தமாகா மத்திய மாவட்ட தலைவர் எஸ்.ஆர். அய்யாத்துரைபாண்டியன் வடக்கு மாவட்ட தலைவர் கென்னடி, தமமுக வடக்கு மாவட்ட செயலாளர் கனிபாண்டியன், மாவட்ட தலைவர் தவம், தெற்கு மாவட்ட செயலாளர் கணேச பாண்டியன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,
அதிமுக அமைப்பு செயலாளர் பி ஜி ராஜேந்திரன், அதிமுக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலெட்சுமி, ஆகியோர் கண்டன உரையாற்றினர் பாஜக நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதிமுக நகர கழக செயலாளர்
வே.சுடலை அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள்
தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் நாள் தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் திணறி வருவதாகவும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத விடியா திமுக அரசை கண்டித்தும் இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்ந்தால் முடியும் என்றும் அதற்காக கூட்டணி கட்சியினர் ஒன்றினைந்து அயராது பாடுபடுவோம் என்று பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த், மாவட்ட கழக அவைத்தலைவர்கள் இலஞ்சி எஸ்.கே.சண்முகசுந்தரம், வி பி மூர்த்தி இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர்கள் பொய்கை சோ மாரியப்பன், சகுந்தலா, பொருளாளர்கள் சாமிநாத பாண்டியன், சண்முகையா மற்றும் அனைத்து கட்சி சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய நகர பேரூர் தலைவர்கள் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.