பள்ளி மாணவி வன்கொடுமை படுகொலைக்கு : பரமக்குடியில் தமிழ்நாடு யாதவ மகாசபையினர் ஆர்ப்பாட்டம்
1 min read
Yadava Mahasabha members protest in Paramakudi over the brutal murder of a schoolgirl
17.3.2026
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்து படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும்,கயவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு நிதி வழங்குவதுடன்,குடும்பத்துடன் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடியில் தமிழ்நாடு யாதவ மகாசபை(ராமநாதபுரம் மேற்கு) சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு யாதவ மகாசபை மேற்கு மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவி பிரதீபா வன்கொடுமையினால் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் சிறிதுநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி போக்குவரத்தை சரி செய்தனர். தமிழ்நாடு யாதவ மகாசபை மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர், பரமக்குடி, போகலூர் வட்டார யாதவ சங்கத்தினர்,ராமநாதபுரம் மாவட்ட அனைத்து யாதவ வணிகர்கள் சங்கத்தினர் உள்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.