பரமக்குடியில் டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
1 min read
Border Security Force flag parade led by DSP Jebaraj in Paramakudi
17.3.2026
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23 ம்தேதி நடைபெற்று மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் நேர்மையான முறையில் அமைதியாகவும்,அச்சமில்லாமல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் தேர்தலின் போது பிரச்சனைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஸ் அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். ஜெபராஜ் தலைமையில் பரமக்குடி வசந்தபுரம் முதல் கிருஷ்ணா தியேட்டர் வரை நடந்த கொடி அணிவகுப்பில் 2 சார்பு ஆய்வாளர்கள் குண்டு மற்றும் மிஸ்ரா, 5 உதவி சார்பு ஆய்வாளர்கள், 39 ஆண் காவலர்கள், 14 பெண் காவலர்கள் என மொத்தம் 60 பேர்களும், பரமக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த 5 காவல் ஆய்வாளர்கள், 5 சார்பு ஆய்வாளர்கள், 7 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 27 காவல் ஆளினர்கள் என 44 பேர்கள் என மொத்தம் 105 பேர் சிறப்பான முறையில் அணிவகுத்து சென்றனர்.அணிவகுப்பின் முன்பு
காவல் வாகனங்கள் எச்சரிக்கை ஒலியுடன் முன்செல்ல தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் அணிவகுத்து சென்றனர்.
-குணாளன், நிருபர்