இனிமேல் விமானத்தில் குடும்பங்கள் ஒன்றாக அமரலாம் – மத்திய அரசு உத்தரவு
1 min read
From now on, families can sit together on flights – Central Government Order
18.3.2026
இந்தியாவில் விமானப் பயணிகளை மனதில் கொண்டு மத்திய அரசு முக்கியமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீதம் இருக்கைகள் இலவசமாக (seat selection charge இல்லாமல்) வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் DGCA (Directorate General of Civil Aviation) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீதம் இருக்கைகள் இலவசமாக (seat selection charge இல்லாமல்) வழங்கப்பட வேண்டும். ஒரே PNR (booking) மூலம் பயணம் செய்யும் குடும்பத்தினர் அல்லது குழுவினர் ஒன்றாக, அருகருகே அமர வைக்கப்பட வேண்டும்.
இதுவரை பல விமானங்களில், ஒரே குடும்பமாக டிக்கெட் எடுத்தாலும் கூட, தனித்தனியாக இருக்கைகள் வழங்கப்பட்டதால் சிரமம் ஏற்பட்டது அருகில் அமர seat selection கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது
இப்போது புதிய விதிமுறையால் குடும்பத்தினர் பிரிந்து அமர வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் குறையும்
விமான நிறுவனங்கள் seat selection போன்ற ancillary charges அதிகமாக வசூலித்தது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர் இதை கட்டுப்படுத்த இந்த விதி கொண்டு வரப்பட்டது.