மீது கல் வீசியவர்கள் அதிநவீன கேமரா, ஏ.ஐ. உதவியுடன் கண்டறியப்பட்டனர்
1 min read
Stone-throwers identified with the help of sophisticated cameras and AI
18.3.2026
நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது;-
“வந்தே பாரத் ரெயில்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் வந்தே பாரத் ரெயில்களில் பொருத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் முசாபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசிய குற்றவாளிகளை, கேமராவில் பதிவான ஒரு நபரின் மிகச் சிறிய புகைப்படத்தைக் கொண்டும், அந்த நபர் வசித்து வந்த வீட்டைத் துல்லியமாக கண்டறிய உதவிய சில செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை் பயன்படுத்தியும் எங்களால் பிடிக்க முடிந்தது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.