தென்காசி மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும்தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
1 min read
Election observers appointed for all 5 assembly constituencies in Tenkasi district
19.3.2026
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளர்கள் செலவின பர்வையாளர்கள் காவல்துறை பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான ஏகே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர்களாக 219. சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் 220 வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு M.கிருஷ்ணகுமார் சிங், LA.S., (தொலை பேசி எண்-9944215580), 221 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 222- தென்காசி சட்டமன்ற தொகுதிகளுக்கு Mr.நீரஜ்குமார். I.A.S. (தொலை பேசி எண்- 9944215570) மற்றும் 223- ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு Ms.ஈஷா பிரியா. I.A.S. (தொலைபேசி எண்-9944215560) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செலவினப் பார்வையாளர்களாக 219. சங்கரன் கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு Mr..அபய் காந்த் தாஸ், I.R.S., (தொலைபேசி எண்-9944931772), 220-வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் 221 – கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு Mr.ராஜ்குமார் சிங், I.R.S.. (தொலைபேசி எண்-9944081773) மற்றும் 222- தென்காசி சட்டமன்ற தொகுதி மற்றும் 223- ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு Mr.அசோக் கௌதம். I.R.S., (தொலைபேசி எண்-9944091771) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவல்துறை பார்வையாளராக Mr.சுஷாந்த் குமார் சக்ஸேனா, I.P.S (தொலைபேசி எண் 9944064439) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள். கருத்துகளை தெரிவிக்க தென்காசி மாவட்டம். குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரிலும் பிற நேரங்களில் தொலைபேசியிலும் மேற்காணும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர்., தெரிவித்துள்ளார்.