June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே 5 சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை-கிணற்றுத் தண்ணீர் காரணமா?

1 min read


Is well water the cause of jaundice in 5 children near Alankulam?

19.3.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 5 பள்ளிச் சிறார்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
ஆலங்குளம் அருகே ஆ. மருதப்பபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சில மாணவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாக வில்லையாம். இதையடுத்து சந்தேதகத்தின் பேரில் பெற்றோர் தனியார் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது. 3 மாணவர்கள் சித்த வைத்தியம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் 1 மாணவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும் மற்றொருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையில் பள்ளி அருகே உள்ள கிணற்றில் உள்ள தண்ணீரைக் குடித்ததாகவும் அதனால் உபாதை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து கிணற்று நீர் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புடன் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *