ஈரானுக்கு மருந்து பொருட்களை இந்தியா அனுப்பியது
1 min read
India sends medical supplies to Iran
19.3.2026
பிப்ரவரி 28 முதல் தொடரும் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானில் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
நூற்றுக்கானோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் மருத்துவமனைகளில் அவசர மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துங்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்த முதற்கட்ட உதவித் தொகுப்பு ஈரானை சென்றடைந்த நிலையில் அங்குள்ள ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் இதை பெற்றுக்கொண்டுள்ளது.
இதை அறிக்கை மூலம் உறுதிப்படுத்திய டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம், இந்த இக்கட்டான நேரத்தில் ஆதரவளித்த இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன், சீனா, அஜர்பைஜான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் ஈரானுக்கு உதவி வழங்கி வருகின்றன.
போரின் காரணமாக சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக ஈரான் அனுமதியுடன் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பத்திரமாக இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.