புளியங்குடி நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பு ஏற்பு
1 min read
New Commissioner of Puliyangudi Municipality assumes charge
19.3.2026
தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி புதிய ஆணையாளர் விஜயகுமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த நாகராஜ் விருதாச்சலம் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த விஜயகுமார் புளியங்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம் செய்யப்பட்டார்.
புதிய நகராட்சி ஆணையாளர் விஜயகுமாரை, நகராட்சி சேர்மன், துணைச்சேர்மன் அரசியல் பிரமுகர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தொழில் அதிபரகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.