June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை

1 min read


Rs. 4.36 crores in bank notes offered at Tiruchendur temple

20.6.2026
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் மார்ச் மாதம் 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 797 ரூபாய் உண் டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் எண்ணிக்கை கோயில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

திருக்கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டார். இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அற நிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன். மெய்வேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி,மோகன், கருப்பன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

உண்டியல் எண் ணும்பணியில் அயற்பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்ட னர். இதன்படி உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 797 ரூபாயும், தங்கம் 1.143 கிராம், வெள்ளி 20,474 கிராம் மற் 4 றும் வெளிநாட்டு கரன்சிகள் 2,071ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி யிருந்தது தெரிய வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *