கீழப்பாவூர் அருகே லாரி டிரைவரிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்
1 min read
Rs. 1.20 lakh seized from lorry driver near Keelappavur
20.3.2026
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த
லாரியை வழிமறித்து சோதனை நடத்திய போது அந்த லாரியில் மறைத்து வைத்திருந்த ரூபாய் 1.20 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆலங்குளம்சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று காலையில் வாகன சோதனை நடைபெற்றது.
வேளாண்மை துறை உதவி பொறியாளர்சண்மகப்பிரியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வெளி மாவட்ட பதிவின் கொண்ட லாரி ஒன்று வந்தது அதை பறக்கும் படியிலான அதிகாரி தலைமையிலான போலீசார் வழி மறித்தனர்
பின்னர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் சோழநாகரை சேர்ந்த பரமசிவன் மகன் சிவராஜ்(வயது 26) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பேக்கை வாங்கி சோதனை செய்தனர் அதில் ரூ 1.20 லட்சம பணம் இருந்தது அது தொடர்பாக லாரி டிரைவரிடம் விசாரித்த போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்ததாக தெரிவித்தார். மார்க்கெட்டில் நேற்று வெங்காயத்தை இறக்கிவிட்டு அதற்கு வாடகை ரூபாய்.1. 20 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
இதனால் அந்த பணத்தை பருமுதல் செய்து பறக்கும் படையினர் வாடகை குறித்து ஆவணங்களை கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர் லாரி டிரைவரிடம் வாடகை பணத்தை பறக்குமடையினர் பறிமுதல் செய்தது தென்காசி பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.