வீரசிகாமணியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி-கலெக்டர் பங்கேற்பு
1 min read
100 percent voting awareness program in Veerasikamani panchayat area
21.3.2026
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரசிகாமணி ஊராட்சி பகுதியில் நேற்று (20.032026)
100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம் மற்றும் புளியங்குடி நகராட்சி நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- முன்னிட்டு 100% வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே ரங்கோலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோன்று தேர்தல் விழிப்புணர்வு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும் ரங்கோலியின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் விழிப்புணர்வு ஏனென்றால் வருகின்ற ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 அன்று நடைபெற உள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் தவறாமல் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தங்கள் வாக்கினை பதிவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். மேலும். அனைவரும் 100% வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, இந்திய ஜனநாயகத்தில் பங்காற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர். தெரிவித்தார்.
முன்னதாக, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பால்துரை. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அப்துல் சமது, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் விஜயகுமார். உதவி திட்ட அலுவலர்கள் கனகராஜ். டேவிட் ஜெயசிங், பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.