June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

1 min read


Election awareness rally in Paramakudi

21/3/2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்துவது கடமை மட்டுமல்ல,அது ஜனநாயகத்தின் பெருமை என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பரமக்குடி சட்டமன்ற (தனி ) தொகுதி தேர்தல் பார்வையாளர் (பொது)ரெஹனா பதூல் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ஞா.சரவண பெருமாள்,தேர்தல் பார்வையாளரின் தொடர்பு அலுவலர் எம்.சாந்தி, வட்டாட்சியர்கள் ராமமூர்த்தி (பரமக்குடி),ஸ்ரீராம்( கமுதி), பரமக்குடி துணை வட்டாட்சியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமர் வரவேற்றார்.

பேரணியில், வருவாய்த் துறை அலுவலர்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்,மகளிர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள், வியாபாரிகளிடம் தேர்தல் பார்வையாளர் (பொது) ரெஹனா பதூல் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முன்னதாக,சிறுவர்,சிறுமிகள், மாணவ, மாணவிகளின் சிலம்பம்,
போன்ற கண்கவர் விளையாட்டுகள் அனைவரையும் கவர்ந்தன.

-Gunalan, Paramkkudi

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *