August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

1 min read

Rs. 1 lakh seized from fishmonger near Sankarankovil

21.6.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருக்காலங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் மீன் வியாபாரியிடம் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை 5 யினர் இன்று அதிகாலை மருக்கலாங்குளம் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் 5 சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட் டிருந்தனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை வழிமறித்தனர்.

அந்த வாகனத்தில் புளியங்குடி சிந்தாமணியை பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி முருகேசன் என்பவர் இருந்தார். அவரிடம் இருந்த பையை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் ரூபாய் ஒரு லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலுக்கு மீன் வாங்கு வதற்காக செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆவணங்கள் கையில் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய் யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வசம் பணம் ஒப்படைக்கப் பட்டது.

மேலும் உரிய ஆவணங்களைகொண்டு வந்து கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் முருகேசனிடம் தெரிவித்தனர். இதுவரையிலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் அதிரடி படையினர் நடத்திவரும் வாகன சோதனையில் இதுவரை அரசியல்வாதிகள் யாரும் சிக்கவில்லை மாறாக வியாபாரிகளிடம் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *