பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
1 min read
Election observers inspect polling stations in Paramakudi constituency
20.3.2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி தேர்தல் பார்வையாளர்(பொது) ரெஹனா பதூல் நேற்று பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி மையங்களான சிவானந்தம் பள்ளி, எம். நெடுங்குளம்,உரப்புளி,செய்யாமங்கலம் உள்பட பல்வேறு கிராம வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை இவிஎம் பெட்டிகள்) பார்வையிட்டுஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ஞா. சரவணப் பெருமாள்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், பரமக்குடி வட்டாட்சியருமான பி.ராமமூர்த்தி,தேர்தல் பார்வையாளரின் தொடர்பு அலுவலர் எம்.சாந்தி, பரமக்குடி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
-குணாளனம், பரமக்குடி