June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இரவணசமுத்திரத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

1 min read

Iftar fast-breaking ceremony at Iravanasamudra

21.3.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரவணசமுத்திரம் ஆதம் ஹாஜியார் பள்ளிவாசலில் புனித ரமலானையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் நம்ம டாக்டர் இம்மானுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கும் அரசாக விளங்கி வருகிறது. திமுகவுக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் உறுதியானது. இதனை யாராலும் பிரிக்க முடியாது. இது போன்ற நோன்பு திறப்பு நிகழ்வுகள் சமூக நல்லிணக்;கத்தையும், ஒற்றுமையையும் பறைசாற்றுவதாக உள்ளது. இஸ்லாமிய நண்பர்கள் சகோதரத்துவடனும், உண்மையாகவும் இருப்பவர்கள்.
இஸ்லாமியர்கள் தனது ஆண்டு சேமிப்பில் 2.5 சதவீதம் தொகையை கட்டாய கடமையாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று ஜகாத் சொல்கிறது. இது வறுமையை ஒழிக்கவும், சமூகத்தில் செல்வ சமநிலையை ஏற்படுத்தவும் உதவுகிறது. அதன்படி அனைவரும் தங்கள் வருமானத்தில் சிறிய பங்களிப்பை செய்தால் தமிழகத்தில் வறுமை இல்லாத நிலை ஏற்படும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முதல்வர் ஸ்டாலின் கரத்தினை வலுப்படுத்தி, திமுக ஆட்சி தொடர்ந்திட பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *