June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பசியில்லா தமிழகம் மூலம் ரம்ஜான் சிறப்பு விளையாட்டு போட்டி

1 min read

Ramzan special sports competition by Hungry Tamil Nadu

22.3.2026

தமிழகம் முழுவதும் சாலையோரம் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட முதியவர்களை தொடர்ந்து பராமரித்து வருகிறது பசியில்லா தமிழகம் அறக்கட்டளை.

பசியில்லா தமிழகம் மூலமாக தென்காசி மாவட்டம் இந்திரா நகர் பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு விளையாட்டு போட்டியில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் இளைஞர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டி மாணவ மாணவிகளிடையே ஒற்றுமையை வலியுறுத்தி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா வரவேற்புரை ஆற்றினார். இந்திரா நகர் அல்-ரிபாய் பள்ளிவாசலைச் சார்ந்த தலைவர் திவான் கான், துணைத் தலைவர் முகமது ரஃபீக், பொருளாளர் முகமது நைனார், துணைப் பொருளாளர் ஷாஹிர்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நன்னகரம் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் திரு. பார்த்திபன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தன்னம்பிக்கை பேச்சாளர் மருத்துவர் திருமதி. ஆஃபிலா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். விளையாட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திரா நகர் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் அதீப், நௌபல், அர்ஷத், கபீப்‍, ஜாவித், குலாம், ஹக்கிம், அப்துல் ரஹ்மான், அமீர் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நிறைவாக சமூக ஆர்வலர் ஹாரூன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *